நாங்களும் ஆயுதம் தயாரிப்போம்: ரஷிய அதிபர் புதின் மிரட்டலால் அமெரிக்கா அதிர்ச்சி
அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் என்று ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளதால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது
கடந்த 1987-ம் ஆண்டு அமெரிக்கா- ரஷியா இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி குறுகிய மற்றும் நடுநிலை அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துவது, ஏற்கனவே தயாரித்த பல பல ஆயுதங்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுமே பெரும்பாலான அணு ஆயுதங்களை அழித்தன. புதிய ஆயுதங்களும் தயாரிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் பேட்டியளித்தபோது, ‘அமெரிக்கா- ரஷியா இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.
தற்போது நிலைமைகள் மாறி விட்டது. எங்கள் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி பல ஆயுதங்களை தயாரித்து வைத்து கொள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது.
அவர்கள் ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில் பல நாடுகள் இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து உள்ளன.
ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. எனவே, தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது போல் காட்டிக்கொள்ள எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.