நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என்றும், நாங்கள் அற வழியில் போராடிக்கொண்டிருக்கிறோம் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
இன்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த போராட்டம் நடந்தபோது பேருந்துகள் மற்றும் ரயில்கள் மீது கல் வீசி எறியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது