நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான செலவை வசந்த குமாரிடம் வசூலிக்கக்கோரி வழக்கு

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான செலவை வசந்த குமாரிடம் வசூலிக்கக்கோரி வழக்கு

நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனார். இதனையடுத்து அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருக்கும் ஒருவர் எம்பி தொகுதியில் வெற்றி பெற்றதால் தேவையில்லாமல் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது என்ற குரல் அந்த தொகுதி மக்களிடையே எழுந்து வருகிறது

இந்த நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான செலவை எச்.வசந்த குமாரிடம் வசூலிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்ற கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Reply