நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி இல்லை: டிடிவி தினகரன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி இல்லை: டிடிவி தினகரன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 23ஆம் தேதி திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் தொடக்கம் என்றும், அக்டோபர் 21 இல் வாக்குப்பதிவு என்றும், அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்றும், அமமுகவுக்கு நிரந்தரமாக தனி சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுகவை அடுத்து மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடாது என்று கருதப்படுவதால் இந்த தேர்தலிலும் அதிமுக, திமுக இடையே தான் போட்டி என்று தெரிகிறது

நாங்குனேரி தொகுதியில் போட்டியிடுவது திமுகவா? அல்லது காங்கிரஸா? என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply