நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திடீரென பின்வாங்கிய திமுக!
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது திமுகவா? அல்லது காங்கிரஸா? என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.
குறிப்பாக நாங்குநேரி தொகுதியிலும் திமுகவே போட்டியிடும் என அக்கட்சியின் நிர்வாகிகள் கடந்த சில வாரங்களாக பொது மேடைகளிலும் பேட்டிகளிலும் கூறிவந்தனர். உதயநிதி ஸ்டாலின் கூட இதுகுறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் சற்றுமுன் திமுக வெளியிட்ட அறிவிப்பின்படி நாங்குநேரியில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது. திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அக். 23-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என சற்றுமுன் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு செய்துள்ளார். இதனையடுத்து நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது