நாங்குனேரிக்கு பதில் ராஜ்யசபா: முக ஸ்டாலின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்குமா?
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் ராஜ்யசபா எம்பி பதவி முடிவடைவதை அடுத்து அவர் எம்பியாக தொடர வேண்டுமானால் திமுக ஆதரவுடன் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக அவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது
இந்த நிலையில் எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்த நாங்குனேரி தொகுதியை காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு விட்டுக்கொடுத்தால் மன்மோகன்சிங் அவர்களுக்காக ராஜ்யசபா எம்பியை விட்டுத்தர திமுக தயாராக இருப்பதாக முக ஸ்டாலின் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிபந்தனையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்பதால் மன்மோகன்சிங் மீண்டும் ராஜய்சபா எம்பியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது