நாஞ்சில் சம்பத்தை சூழ்ந்த பாஜக தொண்டர்கள்: கொலை முயற்சியா?
தினகரன் அணியின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பாஜக குறித்தும், அதன் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறித்தும் சர்ச்சைக்குரிய பேசி வரும் நிலையில் ஏற்கனவே பாஜக பிரமுகர் ஸ்ரீதர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அவரது வீடு அருகே உள்ள உணவகத்திற்கு சென்ற நாஞ்சில் சம்பத்தை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவரது காரும் சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடகா அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி மற்றும் அவரது தொண்டர்களும் நாஞ்சில் சம்பத்தை பத்திரமாக மீட்டனர். நாஞ்சில் சம்பத் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.