நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: பிரபல நடிகர் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது டுவிட்டரில் கூறிய பிரகாஷ்ராஜ், அதிக பொறுப்புகளுடன் ஒரு புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். தொகுதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட பிரகாஷ்ராஜ், அவ்வப்போது பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கர்நாடகாவில், பாஜவிற்கு எதிராக ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.