நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி எடுபடாது:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி எடுபடாது என்றும், பாஜக மெகா கூட்டணியே வெற்றி பெறும் என்றும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவும், காங்கிரசும் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என மெகா கூட்டணி அமையும் என தெரிகிறது.
அதேபோல் அதிமுக, பாஜக, பாமக, தமாக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் சேர்ந்து இன்னொரு மெகா கூட்டணியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி எடுபடாது, பாஜக மெகா கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.