நாடாளுமன்ற தேர்தல் முடிவை சமூக வலைத்தளங்களே தீர்மானிக்கும்: தொழில்நுட்ப வல்லுனர் தகவல்
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் அதிபர் தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் சமூக வலைத்தளங்களின் பங்கு அதிகம் இருப்பது போல் இந்தியாவிலும் அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என இன்ஃபோசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநருமான மோகன்தாஸ் பய் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தள தகவல் அடிப்படையில் 4 முதல் 5% வாக்குகள் முடிவாகும் என்றும், ஒருசில மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி, தோல்வியை சமூக வலைத்தளங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
18 முதல் 25 வயதுடைய இளம் வாக்காளர்களில் 40 முதல் 50 சதவீதம் பேர் சமூக வலைத்தளங்களால் வழிநடத்தப்படுகிவதாகவும், அவர்களுக்கு முதனமையான தகவல்கள் அங்குதான் கிடைப்பதாகவும்,. இளைஞர்கள் பலர் டிவி பார்க்காமல் யுடியூப் பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இருப்பதால் சமூக வலைத்தளங்கள் முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.