நாடு கடத்தப்படுவதை தவிர்க்க விஜய் மல்லையாவின் அதிரடி முடிவு

நாடு கடத்தப்படுவதை தவிர்க்க விஜய் மல்லையாவின் அதிரடி முடிவு

இந்திய வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடிய தொழிலதிபர் மல்லையாவை லண்டனிலிருந்து நாடு கடத்தக்கோரி இந்தியா தொடுத்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதே போன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பு நேற்று வெளியானது. அந்த தீர்ப்பில் இங்கிலாந்தைச் சார்ந்த கிரிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த மறுநாளே, தான் பெற்றக் கடனை முழுவதுமாக திரும்பச் செலுத்துவதாகவும் அதை வங்கிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்ததுள்ளார்.

இதுகுறித்து விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இந்த விஷயத்தை நான் சட்டப்பூர்வமாக சந்தித்துக்கொள்கிறேன். ஆனால், இங்கு முக்கிய விஷயம் மக்கள் பணம். அந்தப் பணத்தை நான் முழுவதுமாக செலுத்திவிடுகிறேன். வங்கிகளும் அரசாங்கமும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் திரும்பச்செலுத்த முன்வருவது மறுக்கப்பட்டால்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply