நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா? இன்று லண்டன் கோர்ட் தீர்ப்பு
இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? என்பது குறித்த தீர்ப்பை இன்று லண்டன் கோர்ட் வழங்கவுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கிங் பிஷர் நிறுவனங்களின் தலைவரு விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன. இந்த வழக்குகளை அவர் எதிர்கொள்வதற்காக, அங்கிருந்து இங்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
இந்த நிலையில் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை இந்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், தொழிலில் ஏற்பட்ட தோல்வியால்தான் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை, நேர்மையற்ற விதத்தில் மோசடியில் ஈடுபடவில்லை என வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.