நாடு முழுவதும் சிகரெட்டுக்கு தடை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் சிகரட்டை ஒழிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சிகரெட்டை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது
சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்று திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன் ஸ்லைடு போடுவதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளது. சிகரெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதற்கு பதிலாக, சிகரெட் கம்பெனியை இழுத்து மூடி விட்டால் ஒரே நாளில் சிகரெட்டை ஒழித்து விடலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவரும் யோசனையை அரசு காது கொடுத்து கேட்காமல் உள்ளது
இந்த நிலையில் நாடு முழுவதும் இ சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இ சிகரெட் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், விளம்பரம் செய்யும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன