நாடு முழுவதும் 20 மணி மின் தடை: வெனிசுலாவில் மக்கள் தவிப்பு
வெனிசுலாவில் நாட்டி அனைத்து பகுதிகளிலும் 20 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியில் இருந்ததாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்லது.
மின் தடை காரணமாக வெனிசுலாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாததால், நோயாளிகள் பலரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. பேருந்து, ரயில், மெட்ரோ சேவைகளும் முற்றிலும் முடங்கின. கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டன.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பின் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இருட்டடிப்பு இது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.