நாடு வளர்ச்சி பெற பொதுமொழி அவசியம்: ரஜினி கருத்தால் பரபரப்பு
ஒரு நாட்டின் வளர்ச்சி பெற பொது மொழி என்பது மிகவும் அவசியம் என்றும் பொது மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழி என்பது சாத்தியம் இல்லை என்றும் இந்தியை திணித்தால் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவே ஏற்றுக்கொள்ளாது என்றும், ஒருசில வட மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளாது என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி ஆதரவு தெரிவித்திருந்தாலும் ஒருசில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொது மொழி இல்லாமலேயே பல நாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் வழக்கம்போல் பாஜகவுக்கு ஆதரவான கருத்தையே ரஜினிகாந்த் கூறியிருப்பதாகவும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.