‘நாத்திகர்’ என்று டுவீட் செய்த நபருக்கு 10 ஆண்டு ஜெயில். சௌதி அரேபியா அதிரடி
நம்மூரில் நாத்திகர்கள் கடவுளுக்கு எதிரான கருத்துக்களை மேடை போட்டு முழங்குவார்கள், தாலி அறுக்கும் போராட்டம் நடத்துவார்கள், ஏன் ஒரு இயக்கத்தையே கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செளதி அரேபியா நாட்டில் நான் ஒரு நாத்திகன்’ என்று ஒரே ஒரு டுவீட் பதிவு செய்த நபருக்கு அந்நாட்டு அரசு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 2000 சவுக்கடியும் தண்டனையாக கொடுத்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செளதி அரேபியாவில் ‘நாத்திகன்’ என்று கூறுவது தீவிரவாதத்திற்கு சமமான குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் 28 வயது நபர் ஒருவர் ‘நான் ஒரு நாத்திகன், கடவுள் என்பவர் இல்லவே இல்லை’ என்று சமீபத்தில் தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.
உடனடியாக அவரது ஐ.பி முகவரியை கண்டுபிடித்த செளதி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நாத்திகன் என்று டுவிட்டரில் பதிவு செய்த அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2000 சவுக்கடியும் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு £4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு உலகெங்கிலும் உள்ள நாத்திகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.