நாத்திகவாதிகள் ஐதீகத்தை கேள்வி கேட்பது ஏன்? தமிழிசை

நாத்திகவாதிகள் ஐதீகத்தை கேள்வி கேட்பது ஏன்? தமிழிசை

சபரிமலை விவகாரம் குறித்து நாத்திகரான கமல்ஹாசன் தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்று ஒதுங்கிவிட்டாலும், ஒருசில நாத்திகர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டு வருவதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

சபரிமலை விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘100 வருடங்களுக்கு முன்பு பெண்கள் மார்பக சீலை அணியக்கூடாது என்ற ஐதீகம் இருந்தது. ஐதீகம் என்ற வார்த்தையை சொல்லி மட்டுமே இன்றும் பெண்களை சபரிமலைக்குள் செல்லக்கூடாது என சொல்பவர்கள், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்த ஐதீகத்தை தற்போது பின்பற்ற முடியுமோ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்

திருமாவளவனின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘ஐதீகம் என்பது வேறு அடக்குமுறை என்பது வேறு. அன்றிருந்தது அடக்குமுறை. ஐதீகம் அல்ல…நாத்திகவாதிகள் ஐதீகத்தை கேள்வி கேட்பது ஏன்? முத்தலாக்? மசூதிக்குள் பெண்கள் நுழைய தடை? பற்றி ஏன் பேச மறுப்பு ஏன்? கன்னியாஸ்திரிகள் மானபங்கப்பட்டதை கண்டிக்க மனம் இல்லை ஏன்? அதெல்லாம் பெண்ணுரிமை இல்லையா? என்று கூறியுள்ளார்.,

 

Leave a Reply