சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
சென்னை மதுரவாயல் என்ற பகுதியை சேர்ந்த செல்வி என்ற 48 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது
தான் எப்போதும் வெளியே செல்ல வேண்டும் என்று கூறி வந்ததாகவும் ஒரு சில நேரங்களில் வெளியே செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் திடீரென அவர் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்