நான்கே தொகுதிகள்: கூட்டணிக்கு வர்றிங்களா? இல்லையா? தேமுதிகவுக்கு கெடு
விஜயகாந்த் கடந்த 14 ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த தேமுதிக கட்சியே ஒருசில வாரத்தில் பிரேமலதாவும் சதீஷும் தங்களது சுயநலத்தாலும், பேராசையாலும் அதலபாதாளத்திற்கு தள்ளிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிகவுகு இறுதி வாய்ப்பு ஒன்றை அதிமுக அளித்துள்ளது. அதன்படி வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் உடன்பாடு என்றால் மட்டுமே கூட்டணி என அதிமுக தரப்பு இறுதி முடிவாக கூறிவிட்டதாம்
இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுகவால் வெற்றி பெற முடியாத தொகுதி என்பதால் தேமுதிகவுக்கு தள்ளிவிடப்படுவதாகவும், இதை பெற்றுக்கொண்டு கூட்டணியில் இணைந்தால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் தேமுதிக ஆலோசித்து வருகிறது.