நான் கூறினால் மட்டும்தான் சிக்னல்: கமல்ஹாசன்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி, காங்கிரஸ் அணியில் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்
மேலும் ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை. ரஜினி பா.ஜனதா பக்கம் சென்றால் தலித், சிறுபான்மையினர் உள்ளிட்ட 36 சதவீத வாக்குகளை இழப்பார் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன் என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான், நான் கூறினால் தான் சிக்னல் என கூறி உள்ளார்.