நான் சந்தர்ப்பவாதி அல்ல, ரஜினியை என்னோடு ஒப்பிட வேண்டாம்: கமல்

நான் சந்தர்ப்பவாதி அல்ல, ரஜினியை என்னோடு ஒப்பிட வேண்டாம்: கமல்

நடிகர் கமல்ஹாசன் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தான் ஒரு சந்தர்ப்பவாதி இல்லை என்றும் தொலை நோக்கு பார்வை உள்ளவர் என்றும், ரஜினியை என்னோடு ஒப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்

மேலும், ‘பொருத்தமான, உகந்த தருணத்தில் நான் அரசியலுக்கு வந்ததால் நான் சந்தர்ப்பவாதி என்று அர்த்தமல்ல, நான் சந்தர்ப்பவாதி அல்ல. எனக்கென்று ஒரு தொலைநோக்குப் பார்வை உண்டு. அதை எனக்குரிய திறனாலும், பலத்தாலும் நான் நிறைவேற்றுவேன். இந்தியாவை பன்முகத்தனமை கொண்ட நாடாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் எனவும் கமல் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிடுவது நியாயமல்ல என்று கூறிய கமல், ‘இது, ஜான் வெய்ன் – மர்லின் பிரான்டோ மற்றும் சார்லி சாப்லின் – ஜான் வெய்ன் ஆகியோருக்கு இடையிலான பொருத்தமற்ற ஒப்பீடு போன்றதாகும். இவர்கள் அனைவரும் அவரவர் பாணியில் உயர்வானவர்கள். ஆனால், வெவ்வேறு விதமானவர்கள். இப்படி யாரும் ஒப்பிடப்படுவதில்லை’ என சுட்டிக் காட்டினார்.

Leave a Reply