நான் தமிழ் மொழியை பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலி: பிரதமர் மோடி
பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று விருதுநகர் மக்களிடம் காணொளி காட்சி மூலம் பேசினார். அப்போது பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்களின் பல கேள்விகளுக்கு அவர் சாதுர்யமாக பதிலளித்தார்.
அப்போது ஒரு கேள்விக்கு பதில் கூறும்போது, ‘மொழி மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால் தமிழ் மொழி பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் முன்னேற்றத்தையே விரும்புவதாகவும், அவர்கள் வாக்குறுதிகளை விடச் செயல்பாடுகளையே எதிர்பார்ப்பதாகவும், முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் தேர்வு எப்போதும் பா.ஜ.க தான் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் பரம்பரை கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணும் வேளையில், மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்குப் பாஜக விரும்புகிறது” என்று திமுகவை மறைமுகமாக பிரதமர் மோடி சாடினார்.