நார்வே; எப்.எம். ரேடியோ ஒலிபரப்பை முற்றிலும் நிறுத்திய முதல் நாடு

நார்வே; எப்.எம். ரேடியோ ஒலிபரப்பை முற்றிலும் நிறுத்திய முதல் நாடு

நார்வே நாட்டில் தேசிய மற்றும் தனியார் எப்.எம்.கள் அதிகளவில் ஒலிபரப்பாகி வந்த நிலையில் கடந்த புதன் முதல் அனைத்து தேசிய எப்.எம்.ரேடியோ ஒலிபரப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் எப்.எம். ரேடியோ ஒலிபரப்பை நிறுத்திய முதல் நாடு நார்வே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்.எம். ரேடியோவிற்கு பதிலாக டிஜிட்டல் ரேடியோ ஒலிபரப்பை நார்வே தொடங்கவுள்ளதாகவும், எப்.எம் ரேடியோவை விட மூன்று மடங்கு கட்டணம் குறைவாகவும், அதிக சேனல்களும் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பில் இருக்கும் என்றும் நார்வே அறிவித்துள்ளது.

மேலும் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பில் சவுண்ட் தரமும் , தெளிவான இசையும் இருக்கும் என்பதால் மக்கள் இதனை விரும்பி கேட்பார்கள் என்றும் நம்புவதாகவும் நார்வே அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply