நாளை இடைக்கால பட்ஜெட்டா? முழு பட்ஜெட்டா?
பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பொறுப்பேற்கும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் நாளை தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் இல்லை, முழு பட்ஜெட் தான் என்று வதந்திகள் பரவின.
இந்த நிலையில் இந்த பட்ஜெட்டை தாக்கால் செய்யும் இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இதுகுறித்து கூறியபோது, இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்’ என்றும் முழு பட்ஜெட் தாக்கல் இல்லை என்றும் தெரிவித்துளார்.
மேலும் இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்க்கட்சியினர் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.