நாளை முதல் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக தாக்கல் செய்தது. ஆனால் இந்த தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்தார். இதனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், முதல்வர் பழனிசாமி பதவி விலகும் வரை சட்டசபையில் பங்கேற்க போவதில்லை என்றும் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.