தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக இரவு நேரத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு பதிலாக பகல் நேரத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ரயில்கள் விமானங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு செல்ல ஆட்டோக்கள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது