நிகர்நிலை பல்கலைக்கு புதிய விதிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

நிகர்நிலை பல்கலைக்கு புதிய விதிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

studentsநிகர்நிலை பல்கலைக்கான புதிய விதிமுறைகளை மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தேசிய தரவரிசை செயல் திட்டத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகம் கட்டாயம் இணைய வேண்டும். வெளிநாடுகளில் கிளைகள் துவக்க வெளியுறவு, உள்துறை அமைச்சக அனுமதி பெறுவது அவசியமாகும். ராகிங் இனபாகுபாடு தடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும், பல்கலை ஆய்வுகள் விடியோவில் பதிவு செய்வதுடன், இணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்

மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், 50 சதவீதத்திற்கு மேல் அரசு உதவி பெறும் பல்கலையில் மட்டும் அரசு உறுப்பினர் இடம் பெறுவர் என்ற புதிய விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply