நித்தியானந்தாவை கிண்டல் செய்த பிரபல நடிகை
மிருகங்களை பேச வைக்க சாப்ட்வேர் கண்டுபிடித்திருப்பதாக சமீபத்தில் அறிவித்த நித்தியானந்தாவை பல நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில் ‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை பிரியா பவானிசங்கர், நித்தியானந்தாவை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் பிரியா பவானிசங்கர் கூறியிருப்பதாவது: இந்த பிரபஞ்சத்திற்கே என்னை பின்பற்றுவதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது. நான் எதற்காக வந்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு (செய்கை காண்பிக்கிறார்). இந்த பிரபஞ்சம் என்னை பின்பற்றியே ஆக வேண்டும்
பிரியா பவானிசங்கரின் இந்த டப்மாஷ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது