நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டி. வெற்றி பெறும் நிலையில் ஆஸ்திரேலியா
நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 65.4 ஓவர்களில் 370 ரன்கள் குவித்தது. இதற்கு பதிலடியாக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 505 ரன்கள் குவித்தது. ஸ்மித் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரும் சதமடித்தனர்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் வெற்றி பெற 201 எடுக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தற்போது ஆடி வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒருநாள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற 131 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியா அணிக்கு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.