நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் அஸ்வினுக்கு இடமில்லை

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் அஸ்வினுக்கு இடமில்லை

இலங்கை அணிக்கு எதிராக 100% முழு வெற்றியையும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்ற இந்திய அணி டி-20 தொடரையும் சமன் செய்தது. இவ்வாறு தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி அடுத்ததாக வரும் 22ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்தப் பட்டியலில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அஜிங்கியே ரஹானே, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவ்னேஷ்வர் குமார் மற்றும் ஷர்தல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடரின் போது அணியில் இருந்த கே.எல்.ராகுல், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஷிகர் தவான், தாக்கூர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். யுவராஜ்சிங் மற்றும் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply