நியூசிலாந்து துப்பாக்கி சூடி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்து துப்பாக்கி சூடி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று மர்ம நபர்கள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், முதல்கட்டத் தகவலில் 6 பேர் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூடு நடந்த மசூதிக்கு தொழுகைக்காக வங்கதேச கிரிக்கெட் அணியினர் செல்ல முயன்றபோது, இந்த தாக்குதல் நடந்தது. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில், ” அனைத்து கிரிக்கெட் வீரர்களும் மசூதிக்கு தொழுகைக்கு செல்வதற்காக பஸ்ஸில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார்.

Leave a Reply