நியூசிலாந்து பெண் பிரதமருக்கு குழந்தை பிறந்தது: பேறுகால விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பினார்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் பேறுகால விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஜெசிந்தா அர்டர்ன் பதவியேற்றுக்கொண்ட பின்னர் கடந்த ஜனவரி மாதம் அவர் கர்ப்பமானார்.
காதலர் கிளார்க் கேஃபார்டுடன் இணைந்து வாழ்ந்து வரும் பிரதமர் ஜெசிந்தா கடந்த ஜூன் மாதம் அழகான பெண் குழந்தைக்கு தாயானார். இதை தொடர்ந்து அவருக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டது.
மகளுக்கு நெவீ என்று பெயர் வைத்த ஜெசிந்தா அர்டர்ன், வீட்டிலிருந்தே பிரதமரின் அலுவலக பணிகளை கவனித்து வந்தார். பிரதமருக்கான பொறுப்புகளை துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கவனித்து வந்தார்.
தற்போது பேறுகால விடுப்பு முடிந்து மீண்டும் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் பணிக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பலதரப்பினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நாட்டின் பிரதமராக பதவி வகித்த போது, குழந்தை பெற்றெடுத்த இரண்டாவது பெண் பிரதமராக ஜெசிந்தா அர்டர்ன் உள்ளார். முன்னதாக பாகிஸ்தானின் பிரதமர் பதிவியில் இருந்த போது பெனாசிர் பூட்டோ குழந்தை பெற்றெடுத்ததது குறிப்பிடத்தக்கது