நியூசிலாந்து பேட்டிங்: 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிப்பு
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி இன்று முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.
இன்றைய போட்டியில் ஷமி அபாரமாக பந்துவீசி முதல் ஓவரில் குப்தில் விக்கெட்டையும், நான்காவது ஓவரில் முன்ரோ விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனையடுத்து சாஹல் 15வது ஓவரில் டெய்லரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த நிலையில் தற்போது நியுசிலாந்து அணி, 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது.