அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் கடந்த 1977-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த விநாயகர் கோவில் வட அமெரிக்காவின் முதலாவது மற்றும் பழமையான இந்து கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விநாயகர் கோவில் அந்த பகுதியில் சிறந்து விளங்கி வருவதால் அந்த கோவில் இருக்கும் தெருவுக்கு ‘விநாயகர் கோவில் தெரு’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
பெயர் சூட்டு நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால், நியூயார்க் மேயர் அலுவலக அதிகாரி எரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டனர்.