நிர்மலாதேவி விவகாரம்: மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
கல்லுரி மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயன்றதாக பேராசிரியராக பணிபுரிந்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் இன்னொரு பேராசிரியரான கருப்பசாமி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கருப்பசாமி ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது
இந்த மனுவின் விசாரணை இன்று நடைபெற்றபோது, ‘நிர்மலாதேவி விவகாரத்தில் மாணவிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், யாரையும் விடுவிக்காமல் விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஜாமீன் கோரி கருப்பசாமி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
மேலும் நிர்மலாதேவி விவகாரத்தில் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. செப்.9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள், மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.