நிர்மலா சீதாராமனின் அருணாச்சலபிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு
மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக அருணாச்சலபிரதேச மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவர் இந்திய-சீன எல்லையில் உள்ள ராணுவ நிலைகளை பார்வையிட்டதோடு அவர்களுடன் உரையாடினார்.
இந்த நிலையில் இந்திய ராணுவ அமைச்சரின் இந்த பயணத்திற்கு சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சான்யிங் கூறுகையில், சீனா – இந்தியா எல்லையில் கிழக்கு செக்டாரில் பிரச்சனை உள்ளது. பிரச்சனைக்குரிய இந்தப் பகுதிக்கு இந்திய தரப்பில் இருந்து பயணம் மேற்கொள்ளப்பட்டது அமைதிக்கு உகந்தது கிடையாது. எல்லையில் அமைதியை பராமரிக்க இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
ஆனால் சீனாவில் இந்த எதிர்ப்பை இந்தியா கருத்தில் எடுத்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்துள்ளது.