நிழலுடன் யுத்தம் செய்யும் வீரர் ஸ்டாலின்: பொன்.ராதாகிருஷ்ணன்

நிழலுடன் யுத்தம் செய்யும் வீரர் ஸ்டாலின்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஒருபக்கம் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் பாஜக தலைவர்களும் திமுக தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நிழலுடன் யுத்தம் செய்யும் வீரன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது என மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் பாஜக முடிவு செய்யும் என்றும், பா.ஜ.க. தமிழக தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளதாக கூறியுள்ள எஸ்.வி.சேகருக்கு தனது வாழ்த்துகள் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply