நிவாரண பணிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் முற்றுகை

நிவாரண பணிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் முற்றுகை

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகளை பார்வையிட சென்ற தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகியோர் தெலுங்கன்குடிகாட்டில் நிவாரண பணிகளை பார்வையிட சென்றனர். அப்போது திடீரென கூடிய பொதுமக்கள் தங்கள் பகுதியில் எந்தவித நிவாரண பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி அமைச்சர்களை முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில் யாராவது அரசை எதிர்த்தால் தீவிரவாதி என முத்திரை குத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும், அமைச்சர்கள் ஆய்வுக்கு செல்லும் போது மக்கள் எதிர்க்கின்றார்கள் என்பது சகஜமே என்றும் எதிர்ப்பை தாங்கிக் கொண்டு மக்களுக்கு கடமையாற்றுவது தான் அரசின் கடமை என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply