நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா! வருத்தமாக இருக்கிறீர்களா! கண்டுபிடிக்கும் கருவி

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா! வருத்தமாக இருக்கிறீர்களா! கண்டுபிடிக்கும் கருவி

sபொதுவாக ‘நீ கல்லு மனசுக்காரன்டா’, ‘உன் மனசுல இருக்குறதை தெரிஞ்சுக்கவே முடியலை’- பள்ளிக்கு செல்லும் சிறுவனில் இருந்து 60வயது முதியவர் வரை, அனைவருக்கும் இந்த சொல் பரிட்சயம். இனி அப்படி சொல்லவேண்டியதில்லை. ஆம், இதற்காகவே, எம்.ஐ.டி அராய்ச்சியாளர்கள் குழு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளது. ஒருவர் மனம் மகிழ்ச்சியாக இருகிறதா அல்லது கோபமாக இருக்கிறதா என்பதை அவரிடம் பேசாமலே அவர்மீது ஒரு கதிரை செலுத்தி கம்ப்யூட்டரின் திரையில் காணலாம். EQ-Radio என்ற இந்த கருவி, மனிதர்களின் உணர்ச்சியை அலைகளை செலுத்தி அறியும் வண்ணம் வடிமைக்கப்பட்டுள்ளது. சுவாசம் மற்றும் இதய துடிப்புகளை கணக்கிட்டு, ஒருவரின் மகிழ்ச்சி, கோபம் அல்லது சோகமாக உள்ளாரா என்று இந்த கருவி காட்டிவிடும். இந்த கருவி 87 சதவிகிதம் துல்லியமாக செயல்படுகிறது.

இது குறித்து, ஆராய்ச்சிக்குழுவின் தலைவரும் எம்.ஐ.டி பேராசிரியருமான டினா கடபியின் நோக்கம், இந்த கருவியை பொழுதுபோக்கு, வியாபார இடங்கள் மற்றும் மருத்துவத்துறையில் பயன்படுத்துவதுதான். மேலும் இதுகுறித்து பேசிய டினா கடபி, பட தயாரிப்பாளர்கள், விளம்பரத் தயாரிப்பாளர்கள், பார்வையாளர்களின் எண்ணம் என்னவென்றும் கண்டறியலாம். ஸ்மார்ட் வீடுகளில் வாழ்பவர்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு என்ன தேவை என பரிந்துரைக்கவும் உதவுகிறது. நம் கண்களால் பார்த்து அறிந்துகொள்ள முடியாத மனிதர்களின் நடவடிக்கைகளை எங்கள் இந்த கருவியின் மூலம் அறிந்து கொள்ளலாம். எங்கள் கண்டுபிடிப்பு வருங்கால தொழில்நுட்ப மாற்றத்திற்கு முதல்படியாக இருக்கும்” என்கிறார்.

கருவி செயல்படும் விதம்:
தற்போதுள்ள மற்ற கருவிகள், ஒருவர் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிய அவர்களில் உடலில் சென்சார்களை பொருத்தியே கண்டறிய முடியும். ஒருவர் அசைவில் இருக்கும்போது இந்த மாற்றங்களை கண்டறிவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். இந்த EQ-Radio ஒருவிதமான வயர்லெஸ் அலைகளை மனித உடலுக்குள் செலுத்துகிறது. அது உடலில் பட்டு திரும்ப கருவியையே வந்தடைகிறது. உடலில் பட்டு திரும்ப வந்த அலைகளில் உள்ள சிறு வேறுபாடுகளின் மூலம் இதய துடிப்புகளில் உள்ள மாற்றங்களை கண்டறிந்து, அதன் மூலம் தூண்டுதல் மூலம் கணக்கிடும். இதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா, கவலையாக அல்லது கோபமாக இருக்கிறாரா எனக் காட்டிவிடும். எடுத்துகாட்டாக, ஒருவரிடம் பெற்ற அலைகள் கணக்கீட்டின் முடிவில் குறைந்த தூண்டுதலால் “எதிர்மறை பாதிப்பு” என்று வந்தால் அவர் “சோகமாக” இருக்கிறார் என்ற முடிவை திரையில் காட்டிவிடும்.

Leave a Reply