நீட் தேர்வு இறுதி விடைக்குறிப்பு வெளியீடு: இன்னும் சிறிது நேரத்தில் முடிவுகள்
நீட் நுழைவு தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் இணையத்தில் வெளியிட்டது. இந்த விடைக்குறிப்புகளை www.ntaneet.nic மற்றும் http://www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் இன்று இன்னும் சிறிது நேரத்தில் நீட்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விடைக்குறிப்புகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
புதிய பாடத்திட்டத்தால் நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எளிதாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் நீட் தேர்வில் அதிகளவிலான தமிழ் மாணவர்கள் தேர்வு பெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது