நீட் தேர்வு: 196 கருணை மதிப்பெண்ணுக்கு சிக்கல் வருமா?

நீட் தேர்வு: 196 கருணை மதிப்பெண்ணுக்கு சிக்கல் வருமா?

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால் 196 கருணை மதிப்பெண்கள் தமிழக மாணவர்களுக்கு வழங்க அதிரடியாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பலருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் வாய்ப்பும், ஏற்கனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பிற மாநில மாணவர்களுக்கு சீட் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்களுக்கு எதிராக சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தை அணுகினால் தங்களின் கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த கேவியட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே நீதிமன்றத்தின் பல்வேறு கண்டனங்களை பெற்றுள்ள சிபிஎஸ்இ, மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply