நீட் நுழைவு தேர்வுக்கு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு எழுத வழக்கம்போல் இந்த ஆண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஹால் டிக்கெட் தவிர ஆதார் போன்ற மற்றொரு அரசு அடையாள அட்டையும் வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்
புகைப்படம் ஒட்டிய ஹால் டிக்கெட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
உடை விவகாரத்தில் கடந்த ஆண்டு போலவே கட்டுபாடுகள் தொடரும். காதணி, மூக்குத்தி, மாலை, வளையல், ஷீ, பெல்ட் என்று எதுவும் அணிய அனுமதி இல்லை.
இவ்வாறு தேசிய தேர்வாணையம் தெரிவித்துள்ளது.