நீண்ட கால தோழியை மணந்த கிரிக்கெட் வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் மோர்கன் தனது நிண்டகால தோழியான தாரா ரிட்ஜ்வே என்பவரை கடந்த வெள்ளியன்று தனது பெற்றோர், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்து அவர் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் சோமர்செட் என்ற வரலாற்று சிறப்புமிக்க பேபிங்டன் ஹவுஸ் என்ற பகுதியில் நடந்த இந்த திருமணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களான ஜேசன் ராய், அலஸ்டைர் குக், ஸ்டீவ் பின், மார்க்வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து ஒருநாள் அணி இலங்கைக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து 3-1 எனத் தொடரை கைப்பற்றியது. 4 போட்டியில் 195 ரன்கள் குவித்த மோர்கன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.