நீதிமன்றத்தை விமர்சித்த சூர்யா: நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதிய நீதிபதி

நீதிமன்றத்தை விமர்சித்த சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதிய நீதிபதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது;

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் என்பவர், நீட் தேர்வு குறித்த அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை நடிகர் சூர்யா விமர்சித்திருந்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதிமன்றம் நீதி வழங்குவதாக சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவதாக கூறியிருந்தார். இந்த கருத்தை அடுத்து அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply