நுரையீரல் பாதிப்படையாமல் பாதுகாக்க எளிய வழிமுறைகள்

நுரையீரல் பாதிப்படையாமல் பாதுகாக்க எளிய வழிமுறைகள்
Don’t-wait-any-longer.-Start-cleaning-your-lungs-with-these-methods-today-350x250
இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழல், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றால், மூச்சுக்குழலிலும், நுரையீரலிலும் படியும் நச்சுப்பொருட்களின் அளவு அதிகமாக இருக்கிறது.

இதுவே, நுரையீரல் தொடர்பான பல்வேறு நோய்களுக்கும், நுரையீரல் புற்றுநோய்க்கும் காரணமாக அமைகிறது. எனவே நுரையீரலைக் காப்பது அவசியம். அதற்கு உதவும் குறிப்புகள் சில…

வாரத்தில் 3 நாட்கள் இறைச்சி உணவு, பால், மது இவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு ஒரு கோப்பை கிரீன் டீ அருந்த வேண்டும்.

காலை உணவுடன் அன்னாசி பழச்சாறு பருகுங்கள். காலை உணவருந்திய பின்னர் சிறிது இடைவெளி விட்டு கேரட் சாறு பருகுங்கள்.
மதியவேளை உணவுக்கு காய்கறிகள் மட்டும் பயன்படுத்துங்கள். உணவருந்திய பின்னர் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், நச்சுக்களை அகற்ற பெரிதும் உதவுகிறது.

மாலை வேளையில் டீக்கு பதில் அன்னாசி பழச்சாறு அருந்துங்கள். நொறுக்குத்தீனிக்குப் பதில் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.

இரவு ‘கிரான்பெர்ரி’ சாறு பருகுங்கள். இது நுரையீரலில் தங்கியுள்ள பாக்டீரியாவை வெளியேற்ற உதவும்.

அடுத்த நாள் காலை யோகா செய்யுங்கள் அல்லது நுரையீரலுக்கு பயன் தரும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இரவு வெந்நீர் குளியல் மேற்கொள்ளுங்கள். இதனால் நுரையீரலில் படிந்துள்ள நச்சுகள் வியர்வையால் வெளியேற்றப்படும்.

இறுதியாக, வெந்நீரில் இரண்டு சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து நீராவி பிடியுங்கள். இது நுரையீரலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

Leave a Reply