நுழைவுத் தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்ளும் உத்திகளை கையாள வேண்டும்’

நுழைவுத் தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்ளும் உத்திகளை கையாள வேண்டும்’

Entrance-Examகடினமான நுழைவுத் தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்ளும் உத்திகளை மாணவர்கள் கையாள வேண்டும் என்றார் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா கேரியர் பாய்ண்ட் துணை மேலாளர் மணிஷ் சர்மா.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில், தனலட்சுமி சீனிவாசன் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
மாணவர்கள் 8 ஆம் வகுப்பு முதல் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை தொடங்க வேண்டும். விடாமுயற்சியுடனான பயிற்சியை அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டும். நீட், ஐ.ஐ.டி, ஜே.இ.இ உள்ளிட்ட கடினமான நுழைவுத் தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்வதற்கான உத்திகளை முறையாக கையாள வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்வதற்கான முறைகள், தேர்வு குறித்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா கேரியர் பாய்ண்ட் துணை மேலாளர் மணிஷ் சர்மா.
விழாவுக்கு தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடக்கி வைத்தார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன்.
இந்த விழாவில், புதுக்கோட்டை வெஸ்டிலி பள்ளி தாளாளர் கனகராஜ், கல்லூரி முதல்வர்கள் இளங்கோ, முத்தரசன், எஸ்.எச். அப்ரோஸ், சுகுமார், வேல்முருகன், கோவிந்தசாமி, ராஜலட்சுமி, பாஸ்கரன், கல்லூரி துணை முதல்வர்கள் கஜலெட்சுமி, ஜி. ரவி, முதன்மை நிர்வாக அலுவலர் எஸ். நந்தகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் எம். மணிமாறன் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்ட்டியூட் ஆப் ரிசர்ச் அன்ட் டெக்னாலஜி முதல்வர் முனைவர் வி. சேகர் வரவேற்றார். வேலைவாய்ப்புத் துறை டீன் மோகன் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

Leave a Reply