நூலிழையில் உயிர்தப்பிய வெனிசுலா அதிபர்: அதிர்ச்சி வீடியோ
வெனிசுலா நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் அதிபர் கலந்து கொண்டபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்
வெனிசுலா தேசிய படைகளின் 81-வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற அதிபர் மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அதிபர் மதுரோ உயிர்பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வெனிசுலா தொலைத்தொடர்பு துறை மந்திரி ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் தெரிவித்தார்.
#Breaking – the moment #Venezuela president Nicolas Maduro is cut off mid speech, as a drone fitted with explosives is set off nearby. #Urgente
pic.twitter.com/HD9xICBwjk— Jamie Johnson (@JamieoJohnson) August 4, 2018