நெதர்லாந்து செல்கிறார் விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி
பாகிஸ்தான் நாட்டின் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி என்பவரை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 31ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவி பாகிஸ்தானில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கியிருந்த நிலையில் தற்போது அவர் அங்கிருந்து நெதர்லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
‘ஆசியா பீவியை இம்ரான் கான் அரசு விடுதலை செய்துள்ளது. நெதர்லாந்து தூதர் மற்றும் அதிகாரிகள் முல்தான் சிறைக்கு சென்று விடுதலையை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீவியை நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என டிஎல்பி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.