நெத்திலி கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி?

நெத்திலி கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

நெத்திலி கருவாடு – 50 கிராம்

சின்ன வெங்காயம் – 15

பூண்டு – 1

தக்காளி – 2

புளி – எலுமிச்சையளவு

முருங்கை, கத்தரிக் காய் – தலா 2

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு

தேங்காய்ப் பால் – 2 டீஸ்பூன்

வறுத்து அரைக்க

மல்லி – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 8

மிளகு – 1 டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

வெந்நீரில் கருவாட்டை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள். மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளியைச் சேர்த்து கரையும்வரை வதக்குங்கள். நறுக்கிவைத்திருக்கும் முருங்கைக் காய், கத்தரிக் காயைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், வறுத்து அரைத்தப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

பிறகு புளிக்கரைசல்,தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். காய் வெந்ததும் கருவாட்டைச் சேருங்கள். இறக்கிவைப்பதற்கு முன் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள்.

Leave a Reply