நெருப்புடன் விளையாடுகிறது ஈரான்: டிரம்ப் எச்சரிக்கை

நெருப்புடன் விளையாடுகிறது ஈரான்: டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் நாடு நெருப்புடன் விளையாடி வருவதாக அமெரிக்க அதிபர் டொலாட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா-ஈரான் நாடுகள் இடையே கடந்த ஆண்டு முதல் பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்து கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து இரு நாடுகளுக்கான உறவில் விரிசல் அதிகமானது

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். உரேனியம் அளவை அதிகரித்து ஈரான் நாடு நெருப்புடன் விளையாடி வருகிறது என்று கூறினார்

ஆனால் ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷரீஃப், இதற்கு பதிலளித்தபோது, ‘நாங்கள் அணுஆயுத ஒப்பந்ததை மீறவில்லை. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தின்படி நடந்துகொண்டால் நாங்கள் உரேனியம் தயாரிப்பதை நிறுத்திக் கொள்வோம் என்று கூறினார்.

2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தின்படி ஈரான் நாடு அணுகுண்டு தயாரிக்ககூடாது, அணுஆயுத தயாரிப்பதை குறைக்கவேண்டும். அத்துடன் ஐஏஇஏ(IAEA) என்ற அமைப்பு ஈரான் நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் அணு உலைகளை பார்வையிட அணுமதிக்கவேண்டும் ஆகியவை ஒத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply